சிற்பத்துறை மேதாவியும் நாதஸ்வர உருவாக்குநருமான அராலியூர் நாதஸ்வர சிற்ப வித்தகர் சின்னத்தம்பி அமரசிங்கம் அவர்கள் தமிழரின் இசைக் கருவிகளுள் பழைமையானதாகவும் பண்பாட்டு அடையாளமாகவும் மங்கல வாத்தியமாகவும் திகழும் நாதஸ்வரக் கருவியை இலங்கையில் உருவாக்கிவருகின்ற ஒரேயொரு கலைஞராகவும் இந்து ஆலயங்களுக்குரிய பல தேர்களையும் எண்ணற்ற வாகனங்களையும் உருவாக்கிய சிற்பத்துறை வல்லுநராகவும் ஓவியம், சோதிடம், மனையடி சாஸ்திரம் போன்ற துறைகளில் பாண்டித்தியம் மிக்கவராகவும் இருந்துவரும் சின்னத்தம்பி அமரசிங்கம், அரை நூற்றாண்டுக்கும் மேலாகக் கலைப்பணி ஆற்றி வந்தவர்.

ஆலய வழிபாடுகளில், இசை விழாக்களில், மங்கல வைபவங்களில் நாதமழை பொழியும் நாதஸ்வரக் கலைஞர்களின் புனிதமான கரங்களில் அமரசிங்கம் அவர்களினால் உருவாக்கப்பட்ட கருவிகள் இருந்து வருவதற்கு வழிசமைத்த மகான்.

மேலும் வாசிக்க >